டி20 உலகக்கோப்பை: 'சூப்பர் 12' இனிதே ஆரம்பம்.. ஆஸி- நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

டி20 உலகக்கோப்பை: 'சூப்பர் 12' இனிதே ஆரம்பம்.. ஆஸி- நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
டி20 உலகக்கோப்பை: 'சூப்பர் 12' இனிதே ஆரம்பம்.. ஆஸி- நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

டி20 உலகக் கோப்பை 'சூப்பர்-12' சுற்று போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன. இந்நிலையில் சூப்பர்12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று சந்திக்கின்றன.

ஆனால் சிட்னியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. போட்டி நாளான இன்றும் சிட்னியில் மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆட்டம் ரத்து ஆகலாம் அல்லது குறைந்த ஓவர் கொண்ட ஆட்டமாக நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தில் ஓவர் குறைக்கப்பட்டால் அதற்கேற்ப ஆடும் லெவனை மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும் என்பதால் இரு அணிகளும் தங்களது ஆடும் லெவன் பட்டியலை வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. மேலும், ஆஸ்திரேலியயா அணியை அவர்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து 2011ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த போட்டியிலும் வீழ்த்தியதில்லை. அதற்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணி தீவிரம் காட்டுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம். இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.

நியூசிலாந்து: மார்டின் கப்டில், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஃபின் ஆலன் (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன், ஆடம் மில்னே.

பெர்த்தில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் (மாலை 4.30 மணி) இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதையும் படிக்கலாமே: இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்குமா? - ஆட்டம் ரத்தானால் பலத்த நஷ்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com