நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து திடீரென விலகிய ருதுராஜ் கெய்க்வாட்! காரணம் இதுதான்!

நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து திடீரென விலகிய ருதுராஜ் கெய்க்வாட்! காரணம் இதுதான்!
நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து திடீரென விலகிய ருதுராஜ் கெய்க்வாட்! காரணம் இதுதான்!

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியதோடு ஐசிசி பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை (ஜனவரி 27) தொடங்க இருக்கிறது. முதல் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், டி20 தொடருக்காக, இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

வரும் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய அணி, சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசம், இலங்கை டி20 தொடர்களை வென்று சாதனை படைத்தது.

தற்போது அவரது தலைமையிலேயே நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்திய அணியில் ஏற்கெனவே ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், சுப்மன் கில், தீபக் ஹூடா என 4 தொடக்க வீரர்கள் இருப்பதால், ருதுராஜுக்குப் பதில் வேறு எந்த வீரரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் டி20 வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருத்ராஜ் கெய்க்வாட் (தற்போது விலகல்), சுபமன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், ப்ரித்வி ஷா, உம்ரான் மாலிக், சிவம் மவி, முகேஷ் குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com