ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்த நியூசிலாந்தின் கப்டில்!

ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்த நியூசிலாந்தின் கப்டில்!
ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்த நியூசிலாந்தின் கப்டில்!

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்திருக்கும் ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்து அவரை முந்திருக்கிறார் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மார்டின் கப்டில்.

உலக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முன்னிலையில் இருந்தார். இருப்பினும் அவர் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலை விட 5 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தார்.

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 15 ரன்களை அடித்ததன் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்டில் ரோகித் சர்மாவை முந்தி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்னும் சாதனையை ரோகித் சர்மாவிடமிருந்து பறித்து தன்வசம் கொண்டு வந்திருக்கிறார் கப்டில்

தற்போது அதிக ரன்களை அடித்திருக்கும் கப்தில் 121 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 3,497 ரன்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 132 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உட்பட 3,487 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் இந்திய வீரர் ரோகித் சர்மா. இருவருக்கும் இடையே 10 ரன்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும் நிலையில் வரும் நாட்களில் நடைபெறும் போட்டிகளில் இந்த முதல் இரு இடங்களுக்கு இருவரும் கடுமையாக போட்டிபோடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த பட்டியலில் 99 போட்டிகளில் விளையாடி 3,308 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் விராட் கோலி உள்ளார்.

ஆசியக் கோப்பை போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் ஃபார்முக்கு ஏங்கி வரும் விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் சிறப்பாக விளையாடி தங்கள் திறமையை வெளிக்காட்டும் பட்சத்தில் இருவருமே மார்டின் கப்திலை முந்திச் செல்ல முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com