புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8வயது சிறுமிக்காக ஜெர்சியை ஏலம் விட்டுள்ள நியூசி. வீரர் சவுத்தி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8வயது சிறுமிக்காக ஜெர்சியை ஏலம் விட்டுள்ள நியூசி. வீரர் சவுத்தி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8வயது சிறுமிக்காக ஜெர்சியை ஏலம் விட்டுள்ள நியூசி. வீரர் சவுத்தி

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளார் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி. இறுதி போட்டியில் அந்த அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஏல நடைமுறை வரும் ஜூலை 8 ஆம் தேதி மதியம் 1.45 மணி வரை லைவில் இருக்கும். இந்த ஜெர்சியில் அனைத்து நியூசிலாந்து அணி வீரர்களும் கையெழுத்து இட்டுள்ளனர். டிரேட்மி என்ற தளத்தில் இந்த ஏலம் நடந்து வருகிறது. இதுவரை இந்த ஜெர்சி 43200 அமெரிக்க டாலர்களுக்கு விலை கேட்கப்பட்டுள்ளது.

“எனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளேன். இதில் கிடைக்கும் அனைத்து நிதியையும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது பெண் குழந்தை Hollie Beattie குடும்பத்திடம் அவரது சிகிச்சைக்காக கொடுக்க உள்ளேன். இது என்னால் முடிந்த ஒரு உதவி. இந்த ஜெர்சியை அவளுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியில் ஓரளவாவது உதவும் என்ற நம்பிக்கை உள்ளது” என சவுதி தெரிவித்துள்ளார்.

சிறுமி Hollie Beattie, Neuroblastoma என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Tim Southee is auctioning off one of his match worn playing shirts from the WTC Final to support Hollie Beattie and her ongoing medical treatment needs.

You can find the @TradeMe auction here | https://t.co/a57Lcs7I23

Hollie's story | https://t.co/nq7b2ioMU1 pic.twitter.com/GKEpErCWbd
— BLACKCAPS (@BLACKCAPS) June 29, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com