நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் - இந்தியா ஏ அணிக்கு சஞ்சு சேம்சன் கேப்டன்!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் - இந்தியா ஏ அணிக்கு சஞ்சு சேம்சன் கேப்டன்!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் - இந்தியா ஏ அணிக்கு சஞ்சு சேம்சன் கேப்டன்!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா ஏ அணிக்கு இந்திய வீரர் சஞ்சு சேம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு ஏ அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் செம்படம்பர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ள இந்தியா ஏ அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடரில் இந்திய அணியில் பங்குபெற்று விளையாட ருதுராஜ் கெயிக்வாட், பிருத்வி ஷா, ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதார், கேஎஸ் பரத், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக் உள்ளிட்டோரும் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா ஏ, நியூசிலாந்து ஏ அணிகளுடனான 3 ஒருநாள் போட்டிகளும் சென்னையில் வரும் செப் 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கடந்த ஐபிஎல்லில் இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com