போராடி தோற்றது இந்தியா ! தொடரை வென்றது நியூசிலாந்து

போராடி தோற்றது இந்தியா ! தொடரை வென்றது நியூசிலாந்து

போராடி தோற்றது இந்தியா ! தொடரை வென்றது நியூசிலாந்து
Published on

நியூசிலாந்து அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆடினார். அந்த அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்த. இந்திய தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டும் கலீல் அகமது, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய ஷிகர் தவான் முதல் ஓவரிலே 5 ரன்களுக்கு ஆவுட்டானார். அதற்குபிறகு வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விஜய் சங்கரும் ரோகித் சர்மாவும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாப் புறமும் சிதறடித்தனர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 75 ரன்கள் சேர்த்தனர். இதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் 3 சிக்சர்கள் உதவியுடன் 12 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் தன் பங்கிற்கு 21 ரன்களை விளாசினார். தோனி அவர் இரண்டு ரன்களுக்கு ஆவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் குரணல் பாண்டியா ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல போராடினர். எனினும் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி 2-1 கணக்கில் இழந்துள்ளது. ஏற்கெனவே நடந்த ஒரு நாள் தொடரை இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com