“நந்தனம் நிதித்துறை கட்டடத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டப்படும்” - பழனிவேல் தியாகராஜன்

“நந்தனம் நிதித்துறை கட்டடத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டப்படும்” - பழனிவேல் தியாகராஜன்
“நந்தனம் நிதித்துறை கட்டடத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டப்படும்” - பழனிவேல் தியாகராஜன்

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்தார்.

நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பதில் அளித்து பேசினார். அப்போது, "கடந்த ஒன்றரை வருடமாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் திடீரென பள்ளிக்கு வந்தால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்கமுடியாத நிலை ஏற்படும். மேலும் கற்றுக்கொள்வதிலும் சிரமம் இருக்கும். மேலும், தற்போது குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதை திருத்தம் செய்வதற்கு இந்த நிதியாண்டில் முதல் நிதி ஒதுக்கீடாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படும்" என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், நந்தனத்தில் உள்ள நிதித் துறைக்கு சொந்தமான கட்டிடம் முன்னாள் நிதியமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டியுமான பேராசிரியர் க.அன்பழகனின் பெயரால் அழைக்கப்படும் என்ற அறிவிப்பையும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com