பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி

பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி

பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி
Published on

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பீரித் சிங் தெரிவித்துள்ளார்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டத்தை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா ஹாக்கி அணி 10 முறை வென்றுள்ளது. இந்திய ஹாக்கி அணி சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. இந்தாண்டிற்கான சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் நாளை முதல் மலேசியாவின் இப்போ (Ipoh) நகரில் தொடங்கவுள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நாளை ஜப்பான் ஹாக்கி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பீர்த் சிங் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “இந்தத் தொடரில் எங்களுக்கு ஜப்பான், கொரியா மற்றும் மலேசியா அணிகள் தான் மிகுந்த சவலானதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் தங்களது முழுபலம் கொண்ட அணியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் நமது அணியிலுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவேண்டும். இளம் வீரர்கள் அணியில் உள்ளதால் அவர்கள் குறித்து எதிரணிக்கு தெரியவாய்ப்பில்லை என்பதால் அதை நாம் பயன்படுத்துகொள்ளவேண்டும். அதனால் இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக காயம் காரணமாக இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர்களான ஆகாஷ்தீப் சிங், ரூபீந்தர் பால் சிங், ஹர்மன் ப்ரீத் சிங், லலீத் மற்றும் ராமன்தீப் சிங் ஆகியோர் இத்தொடரில் இருந்து விலகினர். இதனால் இந்திய ஹாக்கி அணி இந்தத் தொடரில் இளம் வீரர்களை கொண்டே களமிறங்கவுள்ளது. மேலும் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான ஹரேந்திர சிங்கின் பதிவிகாலம் முடிவடைந்துவிட்டதால் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமல் இத்தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.            

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com