“ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே கூடாது “ - ஆஸ். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

“ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே கூடாது “ - ஆஸ். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்
“ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே கூடாது “ - ஆஸ். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

இந்திய கிரிக்கெட் அணி  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில்  வென்று காட்டியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தொடர்ந்து காயத்தினால் தொடரிலிருந்து விலகிய போதும் அதை எண்ணி வாடாமல் “அவர் இல்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன்” என சொல்லும் வகையில் இளம் வீரர்கள் இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். 

இந்நிலையில், ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே கூடாது என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். போட்டி  முடிந்த பிறகு ஆஸ்திரேலிய டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்த போது இதை தெரிவித்திருந்தார். 

“ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மாத்திடவே மாட்டோம். மொத்தமாக 1.5 பில்லியன் இந்தியர்களில் முதல் 11 பேரிடம் விளையாடுவது கடினம் தான்” என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஜஸ்டின் லங்கர் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணி வரும் பிப்ரவரி மாதம் நியூலாந்து அணியுடன் விளையாட உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com