தேசப்பற்றெல்லாம் தேர்தலுக்கு மட்டும்தானா..? காம்பீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

தேசப்பற்றெல்லாம் தேர்தலுக்கு மட்டும்தானா..? காம்பீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!
தேசப்பற்றெல்லாம் தேர்தலுக்கு மட்டும்தானா..? காம்பீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

தேர்தல் நேரத்தில் மட்டும்தானா தேசப்பற்று என்று காம்பீரை வறுத்தெடுக்கும் வகையில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கவுதம் காம்பீர். இவர் புல்வாமாவில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார். அதாவது உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடுவதை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஒரு போட்டியில் விளையாடாமல் இரண்டு புள்ளிகள் போனால் அது ஒரு பெரிய பிரச்னை இல்லை எனவும் தெரிவித்தார். இறந்து கிடக்கும் வீரர்களின் உயிரை விட விளையாட்டு ஒன்றும் பெரிதில்லை என்கிற தொனியில் பேசியிருந்தார். புல்வாமா தாக்குதலும் தேர்தல் நேரம் என்பதால் கவுதம் காம்பீரின் இத்தகைய பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டது. கவுதம் காம்பீருக்கு ஆதரவாகவும், மாறுபட்ட கருத்துகளும் எழுந்தன.

ஆனால் காம்பீர் தான் பேசியதை எல்லாம் மறந்துவிட்டு நேற்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயோன உலகக் கோப்பை போட்டியின்போது வர்ணனையாளராக இருந்தார். இதனை வைத்துதான் நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். உங்கள் தேசப்பற்றெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும்தானா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

“ஆமா.. கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்க வந்தாச்சு.. இப்போ உங்க தொகுதியை யார் பாத்துக்கிறாங்க” எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ‘அன்று போட்டியை புறக்கணிக்க வேண்டும் என சொன்னவர், இன்றோ ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்’ எனவும் சிலர் காம்பீரை மறைமுகமாக சாடியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com