இந்திய மகளிர் அணிக்கு பந்துவீசிய சச்சின் மகன்
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசினார்.
லண்டன் லாட்ர்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் பந்துவீசினார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் பந்துவீச்சில் வேதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வீராங்கனைகள் பேட்டிங் பயிற்சி செய்தனர். பொதுவாக லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் இங்கிலாந்து வீரர்களுக்கு அர்ஜுன் பந்துவீசுவதுண்டு. லார்ட்ஸ் மைதானத்துக்கு அருகில் சச்சினுக்குச் சொந்தமான வீடு இருப்பதால், அந்த மைதானத்தில் அர்ஜுன் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவதுண்டு.