நெஹ்ராவை சேர்த்தது தவறு: ஸ்ரீகாந்த் தடாலடி!

நெஹ்ராவை சேர்த்தது தவறு: ஸ்ரீகாந்த் தடாலடி!

நெஹ்ராவை சேர்த்தது தவறு: ஸ்ரீகாந்த் தடாலடி!
Published on

இந்திய டி 20 அணியில், ஆசிஷ் நெஹ்ரா சேர்க்கப்பட்டிருப்பது, அணியை பின்னோக்கி கொண்டு செல்வதற்கு சமமானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘நன்றாக போய்க் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நெஹ்ராவை சேர்ந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. புரிந்துகொள்ளவும் முடியவில்லை. இதற்கு தேர்வுக் குழு தலைவர் ஏதாவது காரணம் வைத்திருக்கலாம். இருந்தாலும் இது தவறு. சில வீரர்கள் பிட்னஸ் டெஸ்டில் தோல்வியடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனது கேள்வி எல்லாம், நெஹ்ரா பிட்னஸ் டெஸ்டிற்கு சென்றாரா? அவரை சோதனை செய்து சான்றிதழ் கொடுத்தார்களா என்பதுதான். சமீபத்திய போட்டிகளில் பாண்ட்யா, குல்தீப், சாஹல் போன்ற இளம் வீரர்களால் இந்திய அணி சாதித்திருக்கிறது. பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். நெஹ்ரா பீல்டிங் சிறப்பானவர் இல்லை. எதிர்காலத்தை முன் வைத்தே வீரர்கள் தேர்வு இருக்க வேண்டும். ஆனால், நெஹ்ராவை சேர்த்ததன் மூலம் அணி சில வருடம் பின்னோக்கி சென்றிருக்கிறது’என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com