neeraj chopras marriage and wife himani mor details
ஹிமானி மோர், நீரஜ் சோப்ராஎக்ஸ் தளம்

டென்னிஸ் வீராங்கனையைக் கரம்பிடித்த நீரஜ் சோப்ரா.. யார் இந்த ஹிமானி மோர்?

ஒலிம்பிக்கின் தங்க மகன் எனப் போற்றப்படும் நீரஜ் சோப்ரா, சத்தமே இல்லாமல், தனது திருமணத்தை முடித்துள்ளார்.
Published on

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் மற்று வெள்ளிப் பதக்கங்களை வென்று கொடுத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் ஹரியானாவின் இளம் சிங்கம் நீரஜ் சோப்ரா. கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தினார், நீரஜ் சோப்ரா.

இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனால், பிரபலமடைந்த நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார். இந்த நிலையில், சத்தமே இல்லாமல், நீரஜ் சோப்ரா தனது திருமணத்தை முடித்துள்ளார்.

neeraj chopras marriage and wife himani mor details
himani mor, neeraj choprax page

டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோர் என்பவரை அவர் கரம் பிடித்துள்ளார். திருமணம் குறித்த எந்த தகவலையும் நீரஜ் சோப்ரா வெளியிடாத நிலையில், தற்போது திருமண போட்டோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய இந்த திருமண நிகழ்வு,ஹிமாச்சலில் நடைபெற்றதாகவும், அதில் 40 முதல் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. நீரஜ் சோப்ரா வெளியிட்ட பதிவில், "இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு வாழ்த்திற்கும் நன்றி. அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.

neeraj chopras marriage and wife himani mor details
மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா இணைந்து பேசிய வீடியோ வைரல்.. திருமணம் செய்ய முடிவா? உண்மை என்ன?

யார் இந்த ஹிமானி மோர்?

ஹரியானாவின் சோனிபட்டின் கந்த்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிமானி மோர். 25 வயதான இவர், ஒரு டென்னிஸ் வீராங்கனை. ஆரம்பக் கல்வியை லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்த அவர், டெல்லியின் மிராண்டா ஹவுஸில் அரசியல் அறிவியல் மற்றும் உடற்கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

தற்போது நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேலாண்மையில் (மேஜர்) முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். ஹிமானி மோருக்கு, ஹிமான்ஷு என்ற ஒரு சகோதரர் உள்ளார். அவரும் ஒரு டென்னிஸ் வீரர்தான்.

neeraj chopras marriage and wife himani mor details
himani morx page

டெல்லி பல்கலைக்கழகத்திற்காக தேசிய அளவில் போட்டியிட்ட மோர், தைபேயில் நடந்த 2017 உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். அதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றதாகக் கூறப்படுகிறது.

அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (AITA) இணையதளத்தின்படி, 2018இல் ஒற்றையர் பிரிவில் 42வது இடத்திலும் இரட்டையர் பிரிவில் 27வது இடத்திலும் அவர் இடம்பிடித்துள்ளார். 2018ஆம் ஆண்டு AITA நிகழ்வுகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். மாசசூசெட்ஸில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் அவர் பெண்களுக்கு டென்னிஸில் உதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்துள்ளார்.

neeraj chopras marriage and wife himani mor details
மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com