”ஒற்றுமையாக இருக்கதான் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது” - சர்ச்சை குறித்து நீரஜ் விளக்கம்

”ஒற்றுமையாக இருக்கதான் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது” - சர்ச்சை குறித்து நீரஜ் விளக்கம்
”ஒற்றுமையாக இருக்கதான் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது” - சர்ச்சை குறித்து நீரஜ் விளக்கம்

ஈட்டி தொடர்பாக பாகிஸ்தான் வீரர் குறித்த தன்னுடைய கருத்து பற்றி தேவையில்லாமல் வெளியாகும் எதிர்வினைகள் கவலை அளிப்பதாக நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக ஈட்டியெறிதல் விளையாட்டில் தங்கம் வென்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா. இந்நிலையில், சமீபத்தில் நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில், “ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னதாக தனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் பயன்படுத்தினார். அது தெரியாமல் தனது ஈட்டியை அவர் தேடினேன். பிறகு அது அர்ஷத் வசம் இருப்பதை கவனித்தேன். அதோடு அவரே சென்று தனது ஈட்டியை கேட்டு வாங்கி வந்தேன்” எனச் சொல்லி இருந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் வேண்டுமென்றே இதை செய்திருக்கலாம் என்ற ஊகத்தில் அது சர்ச்சையானது. அது விவாத பொருளாக எழுந்த நிலையில் நீரஜ் ட்விட்டர் மூலமாக இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

“ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் இருக்க தான் விளையாட்டு எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. எனது கருத்துகளை உங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். எனது சமீபத்திய கருத்தினால் மக்கள் ஆற்றி வரும் எதிர்வினையை பார்த்து நான் வேதனை கொள்கிறேன்” என நீரஜ் தெரிவித்துள்ளார். 

இருவரும் கடந்த 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் மற்றும் அர்ஷத் போடியத்தை பகிர்ந்து கொண்ட போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com