உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ்

உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ்
உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ்

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் ஒரிகான் நகரில் ஜூலை 15ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. ஜூலை 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 22 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தன்னுடைய முதல் வாய்ப்பிலே 88.39 மீட்டர் தூரம் வீசி இறுதி போட்டிக்கு எளிதாக முன்னேறினார். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீரரான ரோகித் யாதவ் 80.42 மீட்டர் தூரம் வீசி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின் காயம் காரணமாக எந்த தொடரிலும் பங்கேற்காமல் இருந்த நீரஜ் சோப்ரா கடந்த மாதம் மட்டும் 3 தொடர்களில் பங்கேற்றார். இந்த 3 தொடர்களில் 1 தங்கம், 2 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றிருந்தார்.

கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரில் 83 மீட்டர் வீச முடியாமல் வெளியேறிய நீரஜ் சோப்ரா இந்த முறை இறுதி போட்டிக்கு எளிதாக முன்னேறியுள்ளார். இறுதி போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com