நீரஞ் சோப்ரா
நீரஞ் சோப்ராமுகநூல்

90 மீ. தூரம் எறிந்த முதல் இந்தியர் .. முந்தைய சாதனையை முறியடித்த நீரஜ் சோப்ரா!

ஈட்டு எறிதல் போட்டியில் முதல் முறையாக 90 மீ. தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
Published on

கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்றுவருகிறது டைமண்ட் லீக் தடகளத்தின் 16 ஆவது சீசன். இந்த போட்டியில் கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் ஹரியாணாவை சேர்ந்தவரும்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவருமான நீரஜ் சோப்ராவும் களம் கண்டார் .

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா , தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் ‘நோ த்ரோ’ என்றானதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாவது முயற்சியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து 80.56 மீட்டர், ஃபவுல் மற்றும் 88.20 மீட்டர் தூரம் என அடுத்தடுத்த வாய்ப்புகளில் நீரஜ் ஈட்டியை எறிந்தார்.

இந்தவகையில், தனது 18 ஆவது டைமண்ட் போட்டியில் , 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ள்ளார். இதன்மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா.

நீரஞ் சோப்ரா
WTC | ICC பரிசுத் தொகை அறிவிப்பு.. இந்தியாவுக்கு எவ்வளவு?

அதுமட்டுமல்ல, . கடந்த 2022 ஆம் ஆணு ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் 89.94 மீட்ட தூரம் எறிந்த இவர், தற்போது 90.23 மீ தூரம் எறிந்து தனது சாதனையையே முறியடித்துள்ளார். மேலும், இந்திய வீரரான கிஷோர் ஜெனா 78.60 மீ எறிந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரஞ் சோப்ராவின் இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில்,

“ ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனை; இந்தியா பெருமை கொள்கிறது நீரஞ் சோப்ரா. தோஹா டயமண்ட் லீக் 2025 தொடரில் நீரஜ் தூரம் ஈட்டி எறிந்ததற்கு வாழ்த்துக்கள்; நீரஞ் சோப்ராவின் இந்த அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடு இது.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com