'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி

'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி

'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி
Published on

உலகக் கோப்பைக்கு முன்பு சரியான அணியை உருவாக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா கைபற்றியது. இதனையடுத்து தொடங்கிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ஒரு நாள் தொடரின் முதல் போட்டியை இந்தியா அபாரமாக ஆடி வென்றது. இதனையடுத்து 2 ஆவது போட்டியை இங்கிலாந்து வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில் இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 2 (18) மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஹிகர் தவான் 44 (49) ரன்கள் சேர்த்தார். 

ரோகித் ஷர்மாவிற்கு விக்கெட்டுக்குப் பிறகு இறங்கிய கேப்டன் விராட் கோலி 71 (72) ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த தோனி 42 (66), தாகூர் 22 (13), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் தலா 21 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 257 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி தொடரை கைபற்றியது. அந்த அணியின் ஜோ ரூட் 100 ரன்களும், கேப்டன் மார்கன் 88 ரன்களும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி பேசியதாவது " உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். மிக முக்கியமாக ஒரு வீரரின் திறமையை மட்டும் அதீதமாக நம்பி இருக்கக் கூடாது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கினோம்.

சிறப்பாக அவர் ஆடினார், ஆனால் அந்த ஆட்டத்தை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட இன்னும் முன்னேற வேண்டும். இதில் புவனேஷ் குமார் தன்னுடைய பழைய திறமையை நிச்சயம் மீட்டு வர வேண்டும்.

இதுபோன்ற மாற்றங்கள் வரவில்லை என்றால் வீரர்கள் அணியில் இருப்பது தேவையற்றது போன்று தோன்றும். அப்போது சில முக்கிய முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்கும் " என்றார் கோலி.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com