கொரோனா அச்சம்.. வெர்ச்சுவலாக தேசிய விளையாட்டு விருதுகள் விழா.. ரோகித், இஷாந்த் ஆப்சென்ட்

கொரோனா அச்சம்.. வெர்ச்சுவலாக தேசிய விளையாட்டு விருதுகள் விழா.. ரோகித், இஷாந்த் ஆப்சென்ட்
கொரோனா அச்சம்.. வெர்ச்சுவலாக தேசிய விளையாட்டு விருதுகள் விழா.. ரோகித், இஷாந்த் ஆப்சென்ட்

இந்தியாவுக்காக விளையாட்டு களத்தில் துடிப்போடு செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் விழாவில் கேல் ரத்னா, அர்ஜுனா மாதிரியான ஏழு பிரிவுகளில் விருதுகள் கொடுப்பது வழக்கம். 

நடப்பு ஆண்டுக்கான தேசிய விருதுகளை பெறும் வீரர்களின் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில் நாளை நடைபெற உள்ள விழா கொரோனா அச்சுறுத்தலினால் வெர்ச்சுவலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையம் ஒருங்கிணைத்துள்ள இந்த விருது விழா ஒன்பது வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் வீரர்கள் அனைவரும் வெர்ச்சுவலாக இந்த ஒன்பது இடங்களில் இருந்து குடியரசு தலைவருடன் இணைந்திருப்பார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐந்து கேல் ரத்னா ஏழு பிரிவுகளில் 74 விருதுகள் கொடுக்கப்பட உள்ளன. 

இதில் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவும், அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட இஷாந்த் ஷர்மாவும் துபாயில் உள்ள காரணத்தால் நாடு திரும்பியதும்  விருதினை பெறுவார்கள் என தெரிகிறது. மூன்று பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக மொத்தமாக 9 பேர் இந்த விருது விழாவில் பங்கேற்க மாட்டார்கள் எந்த தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேல் ரத்னா விருதை தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பெங்களூருவிலிருந்து பெற உள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com