\
பஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

பஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

பஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு
Published on

பஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கேல் ரத்னா விருது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் இந்த விருந்து 1991ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதே செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு வழங்கப்பட்டது.

2019 ஆண்டிற்கான கேல் ரத்னா விருது மல்யுத்த வீரர் பஜ்ரங் பனியா மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துரோணாச்சாரியார், அர்ஜுனா விருது உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com