\
சிட்னி டெஸ்ட் போட்டி: சைனி உள்ளே.. நடராஜன் பெயர் மிஸ்ஸிங்!

சிட்னி டெஸ்ட் போட்டி: சைனி உள்ளே.. நடராஜன் பெயர் மிஸ்ஸிங்!

சிட்னி டெஸ்ட் போட்டி: சைனி உள்ளே.. நடராஜன் பெயர் மிஸ்ஸிங்!
Published on

சிட்னி நகரில் நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறவில்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக, கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார் நடராஜன். இந்திய கிரிக்கெட் அணி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அறிமுக வீரராக டெஸ்டில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறவில்லை. இந்திய அணியின் 11 பேரில் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை.

ரஹானே தலைமையிலான அணியில் ரோகித், கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், சைனி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com