\
பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் நடராஜன்

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் நடராஜன்

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் நடராஜன்
Published on: 

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி கோயிலில் சாமிதரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்று அபாரமாக விளையாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று பழனி கோயிலுக்கு சென்றார். சேலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீர்ர நடராஜன் இன்று காலை பழனி அடிவாரத்தில் உள்ள முடிக்கொட்டகையில் மொட்டை அடித்து, ரோப்கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி கோயிலுக்கு வருகை தந்தது குறித்து தகவலறிந்து ஏராளமான பொதுமக்கள் அவரை காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் நடராஜனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முட்டி மோதியதால் ரோப்கார் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் திணறிய நடராஜனை அவரது நண்பர்கள் பாதுகாப்பாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com