ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒசாகா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 28-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுலியை எதிர்த்து விளையாடினார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இறுதி சுற்றில் ஜோகோவிச், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் நாளை மோதுகிறார்.
இதனிடையே மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மற்றும் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா ஆகியோர் நேருக்குநேர் மோதினர். இவர்கள் நேருக்குநேர் மோதியது இதுவே முதல்முறை.
இதில், செக்குடியரசின் குவிட்டோவாவை 7-6, 5-7, 6-4 என்ற கணக்கில் நவோமி ஒசாகா விழ்த்தினார். இதன்மூலம் வீராங்கனை ஒசாகா ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன், தரவரிசையில் முதன்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.