ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்குள் நுழைந்தார் நவோமி ஒசாகா!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றுக்கு நவோமி ஒசாகா தகுதிப்பெற்றார்.
கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் பெல்பர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான 4 ஆவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் நவோமி ஒசாகா மற்றும் கார்பின் முகுருசா இடையே நடைபெற்றது. காலிறுதிக்கு தகுதிப்பெறும் முந்தைய சுற்றுப் போட்டி என்பதால் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
இதில் கார்பின் முகுருசா 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார் நவோமி ஒசாகா. மேலும் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 32-ம் நிலை வீராங்கனையான அலெக்சான்ட்ரோவாவை (ரஷியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
இதே போல் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-4, 6-0 என்ற நேர்செட்டில் கஜகஸ்தானின் புதின்சேவாவை விரட்டியடித்தார்.