\
ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டியில் ஒசாகா - பிராடி மோதல்!

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டியில் ஒசாகா - பிராடி மோதல்!

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டியில் ஒசாகா - பிராடி மோதல்!
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா - ஜெனிபர் பிராடி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகள் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி செக்குடியரசின் கரோலினா முச்கோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை ஜெனிபர் பிராடி 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜெனிபர் பிராடி ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com