ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் நவோமி ஒசாகா அசுரத்தனமாக விளையாடினார்.

இதில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை எளிதாக வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார் நவோமி ஒசாகா. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் கரோலினா முச்சாவோ மற்றும் ஜெனிபர் பிராடி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றிப்பெறுபவர் இறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகாவை எதிர்கொள்ள இருக்கின்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com