தொடர்ந்து 12, டி20 போட்டிகளில் வெற்றி: ஆப்கான் அணி சாதனை!

தொடர்ந்து 12, டி20 போட்டிகளில் வெற்றி: ஆப்கான் அணி சாதனை!

தொடர்ந்து 12, டி20 போட்டிகளில் வெற்றி: ஆப்கான் அணி சாதனை!
Published on

தொடர்ந்து 12, டி-20 போட்டிகளில் வெற்றிபெற்று ஆப்கானிஸ்தான் அணி, அசத்தியுள்ளது.

ஜிம்பாப்வே, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடந்து வருகிறது. டாக்காவில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் பங்களாதேஷ்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (5.5 ஓவர்) இழந்து தடுமாறியது. பின்னர் அஸ்கர் ஆப்கனும், முகமது நபியும் இணைந்தனர். இருவரும் சிறப்பாக ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்கர் ஆப்கன் 40 ரன் எடுத்தார். சிக்சர் மழை பொழிந்த முகமது நபி, 7 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 54 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதனால் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணியை, ஆப்கான் சுழல் பந்துவீச்சாளர்கள் மிரட்டினர். அந்த அணியில் மஹமத்துல்லா மட்டும் அதிகப்பட்சமாக 44 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்காததால், 19.5 ஓவர்களில் 139 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆட்ட நாயகன் விருது 84 ரன்கள் விளாசிய முகமது நபிக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்துள்ளது. சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அந்த அணி தொடர்ச்சியாக 12-வது வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்பும் தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்று அந்த அணிதான் சாதனை படைத்திருந்தது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com