\
‘சீனிவாசன் சார் எனக்கு அப்பா மாதிரி; அவர் எப்போதும் என் பக்கம்’ - சுரேஷ் ரெய்னா

‘சீனிவாசன் சார் எனக்கு அப்பா மாதிரி; அவர் எப்போதும் என் பக்கம்’ - சுரேஷ் ரெய்னா

‘சீனிவாசன் சார் எனக்கு அப்பா மாதிரி; அவர் எப்போதும் என் பக்கம்’ - சுரேஷ் ரெய்னா
Published on

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துபாயில் அடுத்த சில நாட்களில் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். 

அவர் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் கடுமையான கருத்துகளை வைத்த சூழலில் அது குறித்து ரெய்னாவிடம் கேட்டிருந்தது CRICBUZZ நிறுவனம்.

“சீனிவாசன் சார் எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருப்பவர். அவர் எப்போதும் என் பக்கம் தான். என் இதயத்திற்கு நெருக்கமானவர். 

அவர் என்னை அவரது இளைய மகனைப் போலவே நடத்துவார். 

அப்பாவுக்கு மகனைத் திட்டும் உரிமை உள்ளது. அவர் திட்டியதை நான் அப்படி தான் பார்க்கிறேன். 

நான் வெளியேறியதற்கான உண்மையான காரணங்கள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது  அவருக்கு தெரிந்திருக்கலாம். அதன்பிறகு எனக்கு மெசேஜ் கூட அனுப்பியுள்ளார். நாங்கள் அது குறித்து பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்” என ரெய்னா தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com