“நான் செய்த மிகப்பெரிய தவறு 2வது திருமணம்” - இம்ரான் கான் உருக்கம்

“நான் செய்த மிகப்பெரிய தவறு 2வது திருமணம்” - இம்ரான் கான் உருக்கம்

“நான் செய்த மிகப்பெரிய தவறு 2வது திருமணம்” - இம்ரான் கான் உருக்கம்
Published on

தான் செய்த மிகப்பெரிய தவறே இரண்டாவது திருமணம்தான் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். 1971ஆம் ஆண்டு சர்வதேச பாகிஸ்தான் அணியில் இணைந்த இவர், 1992ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1995ஆம் ஆண்டு ஜெமிமா என்பவரை திருமணம் செய்தார். சில காரணங்களால் அவரை 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின்னர் ரேஹம் என்பவரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து, அதே ஆண்டில் அவரை விவாகரத்தும் செய்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இம்ரான், “பொதுவாக நான் ரேஹம் குறித்து எதுவும் சொல்வதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் எனது வாழ்வில் நிறைய பிழைகள் செய்துவிட்டேன். அதில் மிகப்பெரிய ஒரு பிழை ரேஹம்மை திருமணம் செய்தது. நான் அவரை திருமணம் செய்யும் வரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. நான் அவரை பார்க்காமலே எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஏனெனில் நான் அவரை முகத்திரை இன்றி பார்த்ததே இல்லை” என்று தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு புஷ்ரா மேனேகா என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com