\
இலங்கை மைதானத்தில் முரளீதரன் பெயர் திடீர் நீக்கம்

இலங்கை மைதானத்தில் முரளீதரன் பெயர் திடீர் நீக்கம்

இலங்கை மைதானத்தில் முரளீதரன் பெயர் திடீர் நீக்கம்
Published on: 

இலங்கை பல்லகல கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முத்தையா முரளீதரன் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டி மாவட்டத்தில் இருக்கிறது பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம். இந்த மைதானத்துக்கு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முத்தையா முரளிதரன் பெயர் சூட்டப்பட்டது. இதை இப்போது நீக்கியுள்ளனர். இதை முத்தையா முரளிதரனின் தந்தை சின்னையா முத்தையா தெரிவித்துள்ளார்.
இலங்கை மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை நேற்று சந்தித்த அவர், இதற்கான தீர்வை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசி, இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருவதாக அவர் கூறியதாக முரளீதரன் தந்தை தெரிவித்துள்ளார்.