டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா? - முதலில் பேட்டிங்

டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா? - முதலில் பேட்டிங்
டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா? - முதலில் பேட்டிங்

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில்  டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வுச் செய்துள்ளது. மும்பை அணியில் பென் கட்டிங் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகிய இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் மாற்றம் எதுவும் இல்லை.

மும்பை அணியை பொருத்தவரை கடந்தப் போட்டியில் வெற்றிப் பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. அத்துடன் மும்பை அணியில் ரோகித் சர்மா காயத்திலிருந்து மீண்டு கடந்த போட்டிக்கு திரும்பினார். இதனால் மும்பை மீண்டும் அதிக பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல அந்த அணியில் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா மற்றும் சூரிய குமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.

டெல்லி அணியும் கடந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றது.மேலும் அந்த அணியில் ஷிகர் தவான், காலின் முன்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்திவருகின்றனர். இதனால் இந்தப் போட்டி கடும் சவாலான போட்டியாக அமையும் என்று ரசிககர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் 23 ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளன. அதில் 12ல் டெல்லியும் 11ல் மும்பை அணியும் வென்றுள்ளனர். அதேபோல டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில்9 போட்டியில் விளையாடியுள்ளனர். அவற்றில் டெல்லி அணி 6 போட்டிகளிலும் மும்பை அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com