\
சூர்யகுமார் அதிரடி அரை சதம் : 193 ரன்கள் குவித்த மும்பை

சூர்யகுமார் அதிரடி அரை சதம் : 193 ரன்கள் குவித்த மும்பை

சூர்யகுமார் அதிரடி அரை சதம் : 193 ரன்கள் குவித்த மும்பை
Published on

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் மற்றும் ரோகித் ஷர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

23 (15) ரன்கள் எடுத்த நிலையில் டி காக் அவுட் ஆக, பின்னர் வந்த சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை ரோகித் உயர்த்தினார். 35 (23) ரன்களில் ரோகித் விக்கெட்டை பறிகொடுக்க, அவரைத்தொடர்ந்து, வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் இஷான் கிஷண் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் அரை சதம் கடந்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காத அவர் 47 பந்துகளில் 79 ரன்களை குவித்திருந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா தனது பங்கிற்கு 19 பந்துகளில் 30 ரன்களை சேர்த்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com