கே.எல்.ராகுல் அதிரடி சதம் - 197 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி

கே.எல்.ராகுல் அதிரடி சதம் - 197 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி

கே.எல்.ராகுல் அதிரடி சதம் - 197 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி
Published on

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 197 குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 24வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அணியில் இன்று ரோகித் ஷர்மா இல்லாததால், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கிரான் பொல்லார்ட் இந்த முடிவை எடுத்தார். 

ஆனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர், மும்பை கனவை சிதறடித்தனர். 100 ரன்களை கடந்தும் விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் சிறப்பாக விளையாடினர். பின்னர் அணியின் ஸ்கோர் 116 ரன்களாக இருக்கும்போது, கெயில் 63 (36) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார். 

ஆனால் மறுபுற டேவிட் மில்லர் 7 (8), கருன் நாயர் 5 (6), சாம் குரான் 8 (3) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ராகுல் அசத்தலாக 62 பந்துகளில் சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் சாய்த்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com