விளையாட்டு
டாஸ் வென்றது கொல்கத்தா : மும்பை முதல் பவுலிங்
டாஸ் வென்றது கொல்கத்தா : மும்பை முதல் பவுலிங்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்றது.
ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசவுள்ளது.
கொல்கத்தா அணியில் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியதால், அந்தப் பொறுப்பை இயான் மார்கன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். கொல்கத்தா அணியில் டாம் பான்டான் மற்றும் நாகர்கோடி ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக கிரீஸ் கிரீன் மற்றும் சிவம் மவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மும்பை அணியில் ஜேம்ஸ் பட்டின்சனுக்கு பதிலாக நேதன் கட்லர் நைல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.