மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசவுள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை அணி வீரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஹெட்மெயர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக அலெக்ஸ் கேரே மற்றும் ரஹானே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.