கெளரவ போட்டியாகிறதா சிஎஸ்கே V/S எம்.ஐ மோதல் ?

கெளரவ போட்டியாகிறதா சிஎஸ்கே V/S எம்.ஐ மோதல் ?
கெளரவ போட்டியாகிறதா சிஎஸ்கே V/S எம்.ஐ மோதல் ?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெறும் இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் சில மாறுதல்கள் இருக்கலாம்.

சிஎஸ்கே Vs மும்பை தொடரும் மோதல் :

ஐபிஎல் போட்டிகள் மற்ற எந்த இரு அணிகளும் மோதும்போது இல்லாத ஒரு எதிர்பார்ப்பு மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகள் மோதும்போது ஏற்படுகிறது. இது அணிகளின் மோதலாக மட்டுமில்லாமல் ஆன்லைனில் ரசிகர்களின் மோதலாக உள்ளது. தமிழகத்தில் உள்ள ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களே மும்பைக்கு ஆதரவானவர்கள்தான். அவர்கள் இப்போது இருக்கும் மும்பை அணிக்கு ஆதரவாக இருந்தாலும், அவர்கள் முதன் முதலில் மும்பை ஆதரவு தெரிவித்ததற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர் என்ற ஒற்றை மனிதர் என்றால் அது உண்மை. இப்படி உருவான மும்பை ரசிகர்களுக்கும், தோனியை தலைமையாக ஏற்றுக்கொண்ட சென்னை ரசிகர்களுக்கும் இன்று வரையில் மோதல் ஓய்ந்தபாடில்லை. 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கி 14 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று தான் மும்பை மற்றும் சென்னை மோதுகின்றன. மும்பை மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. குறிப்பாக சென்னையிடம் தோற்றுவிடக்கூடாது என மும்பை அணியும், மும்பையுடன் தோற்றுவிடக்கூடாது என சென்னை அணி கவனத்துடன் உள்ளன. இதற்காக இரு அணிகளும் சில யுக்திகளையும் கையாள திட்டமிட்டுள்ளன. இதில் பிரதான திட்டமாக அணியின் மாற்றங்கள் இருக்கும் எனப்படுகிறது. 

அணியில் மாறுதல்கள் :

மும்பை அணியை பொறுத்தவரையில் இஷான் கிஷன் மற்றும் பென் கட்டிங்கை அணிக்குள் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பொல்லார்ட் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு பதிலாக சேர்க்கப்படலாம். பந்துவீச்சில் மிட்ஜெட்ல் மெக்லெநகனுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் பெரெண்டார்ஃப் அணியில் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. மும்பை பிட்ச் இன்று உள்ள நிலவரப்படி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடினமான சூழல் இருக்கும் எனப்படுகிறது.

சென்னை அணியில் பேட்டிங் வரிசையில் சில மாறுதல்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடுவை மிடில் ஆர்டரில் களமிறக்க தோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோன்று சுழற்பந்து மும்பை பிட்ச்சில் சரியாக எடுபடாது என்பதால், மொஹிட் ஷர்மாவை அணிக்குள் கொண்டுவரவுள்ளனர். மிட்ஜெல் சாண்ட்னெருக்கு பதில் அவர் களமிறக்கப்படலாம். அத்துடன் இன்று கேதர் ஜாதவை பந்துவீச்சில் களமிறக்கு எண்ணத்திலும் சென்னை உள்ளதாம்.

சென்னை மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும், மும்பை மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் இன்றைய போட்டியை இரு அணிகளும் மிக முக்கிய போட்டியாக நினைத்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இரு அணிகளின் இந்த முனைப்பும், அவற்றின் ரசிகர்களின் ஆன்லைன் மீம்ஸ் மோதல்களும் இந்தப் போட்டியை கெளரவ மோதலாக மாற்றியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com