டி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு

டி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு
டி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி பெங்களூர் அணி 171 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், கேப்டன் கோலி 8 (9) ரன்களிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பார்திவ் படேல் மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி வேகமாக ரன்களை சேர்த்தனர்.

பார்திவ் படேல் 28 (20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் வந்த மொயின் அலி ஆரம்பம் முதலே அதிரடியை காட்ட, மறுபுறம் வில்லியர்ஸும் வெளுத்து வாங்கினார். இருவரும் அரை சதம் அடித்தனர். அலி 50 (32) ரன்களில் அவுட் ஆனார். இறுதி ஓவரில் டி வில்லியர்ஸ் 75 (51) ரன்களில் ரன் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தனர். மும்பையில் அணியில் மலிங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com