‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை

‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை
‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை

விஜய் ஹசாரே போட்டியில் இரட்டை சதம் அடித்து 17வயது இளம் வீரர் உலக சாதனை படைத்துள்ளார். 

இந்தியாவிலுள்ள உள்ளூர் அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை-ஜார்கண்ட் இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக யாசாஸ்வி ஜெயஷ்வால் (Yashasvi Jaiswal) என்ற 17வயது இளம் களமிறங்கினார். 

இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. அசத்தலாக விளையாடிய யாசாஸ்வி ஜெயஷ்வால் 17 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் மிகவும் குறைந்த வயதில் இரட்டை சதம் கடந்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார். 

இவர் 17 வயது 292 நாட்களில் இரட்டை சதத்தை கடந்து இந்தச் சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் உள்ளூர் லிஸ்ட்-ஏ போட்டி ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 

நடப்பு விஜய் ஹசாரே தொடரில் அடிக்கப்படும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். ஏற்கெனவே கேரளா வீரர் சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் இரட்டை சதம் கடந்து அசத்தியிருந்தார். மேலும் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் யாசாஸ்வி முதலிட்டத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் நடப்பு தொடரில் 5 போட்டிகளில் களமிறங்கி 585 ரன்களை சேர்த்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com