பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேற்றிய டெல்லி

பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேற்றிய டெல்லி
பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேற்றிய டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து மும்பை அணி வெளியேறியது.

ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ்க்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 30 ரன்களாக இருந்த போது பிரித்வி ஷா எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரிலே மேக்ஸ்வெலும் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

 அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். எனினும் இளம் வீரர் ரிஷப் பந்த் பொறுப்பு உணர்ந்து ஆடினார். அதிரடி விளையாடிய ரிஷப் பந்த், 44 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க, இறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. அதன்படி சூர்யகுமார் யாதவ், லெவிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சூர்யகுமார் 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 13 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வருத்ததில் மூழ்கினர்.  தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய லெவிஸ் 31 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 சிக்சர்களும். 3 பவுண்டரிகளும் அடங்கும். அதற்கு பின் வந்த வீரர்கள் டெல்லி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வருவதும், போவதும் இருந்ததால் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மெல்ல குறைய ஆரம்பித்தது. 

                
எனினும் 8-வது வீரராக களம் இறங்கிய கட்டிங் 20 அதிரடியில் மிரட்ட ஒருகட்டத்தில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு இருந்தது. அணியின் ஸ்கோர் 163 ரன்னாக இருந்தபோது கட்டிங் 20 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க மும்பை அணியின் பிளே ஆஃப் கனவு கலையத் தொடங்கியது. இறுதியில் அந்த அணி 19.3 ஒவரில் அனைத்து விகெட்டுகளும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த்து. இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com