RR vs MI : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

RR vs MI : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!
RR vs MI : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 51-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் மும்பை 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனின் முதல் பாதி ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் விளையாடியதில் மும்பை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. 

இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றாக வேண்டுமென்ற கட்டாயத்தில் களம் இறங்குகின்றன. 

ஆடும் லெவன் விவரம்... 

ராஜஸ்தான் ராயல்ஸ்!

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா

மும்பை இந்தியன்ஸ்!

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கீரான் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com