டாஸ் வென்றது மும்பை - கொல்கத்தா முதல் பேட்டிங்

டாஸ் வென்றது மும்பை - கொல்கத்தா முதல் பேட்டிங்

டாஸ் வென்றது மும்பை - கொல்கத்தா முதல் பேட்டிங்
Published on

கொல்காத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ள 11 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று புள்ளிகள் பட்டியலில் 3 இடத்தில் உள்ளது. அத்துடன் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தேர்வாகிவிடும். எனவே இந்தப் போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. 

அதேசமயம் இந்த போட்டியில் தோற்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றிற்குள் நுழையும் வாய்ப்பு பறிபோகும் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது. அந்த அணியில் நிர்வாகம் சரியில்லை என ஆல்ரவுண்டர் ரஸல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனவே இன்றைய போட்டியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பவுலிங் ஆர்டரில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com