பொலார்ட், குல்டர்-நைல் அதிரடி : 176 ரன்கள் குவித்த மும்பை

பொலார்ட், குல்டர்-நைல் அதிரடி : 176 ரன்கள் குவித்த மும்பை
பொலார்ட், குல்டர்-நைல் அதிரடி : 176 ரன்கள் குவித்த மும்பை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 176 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 9 (8) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடக்க வீரராக பேட்டிங் செய்த குயிண்டான் டி காக் நிலைத்து ஆடினார்.

ஆனால் ஒன் டவுனாக வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் 7 (7) ரன்களில் அவுட் ஆக, மும்பைக்கு நெருக்கடி வந்தது. பின்னர் வந்த க்ருனால் பாண்ட்யா மற்றும் டி காக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 பந்துகளை சந்தித்த க்ருனால் பாண்ட்யா 34 ரன்களை எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு நடையைக்கட்ட, அரை சதம் கடந்த டி காக் 53 (43) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி நேரத்தில் கைகோர்த்த பொலார்ட் மற்றும் குல்டர்-நைல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இறுதிவரை ஆட்டமிழக்காத பொலார்ட் 34 (12) ரன்களும், குல்டர்-நைல் 24 (12) ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com