இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் : வாழ்த்தும் முன்னாள் வீரர்கள்!

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் : வாழ்த்தும் முன்னாள் வீரர்கள்!
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் : வாழ்த்தும் முன்னாள் வீரர்கள்!

மும்பையை சேர்ந்த முப்பது வயதான சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்.. கிரீஸுக்கு வந்தாலே ரன் மழை பொழிவார்.. கடந்த 2020 ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் 480 ரன்களை அவர் குவித்திருந்தார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வாகவில்லை. அது அப்போது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார். 

“இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றிருந்தபோதே நான் தேர்வு செய்யப்படுவேன் என எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் ஸ்கோர் செய்திருந்ததால் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். ஆனால் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. அணியில் தேர்வாகாதது எனக்கு விரக்தி தான்” என ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகதபோது சூர்யகுமார் யாதவ் சொல்லியிருந்தார்.  

அதையடுத்து ரசிகர்கள் சிலரும் சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக அப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். 

இந்த சூழலில் தற்போது அவர் இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளார். 

“The Feeling is Surreal” என அண்மையில்  ட்வீட் செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இது இந்திய அணிக்கு தேர்வான உணர்ச்சி வெளிப்பாடு என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

தற்போது முதல்முறையாக இந்திய அணிக்கு விளையாட உள்ள சூர்யகுமார் யாதவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இர்பான் பதான், ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர் என பலரும் வாழ்த்தி வருகின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியும் சூர்யகுமார் யாதவின் விடாமுயற்சியை பாராட்டி ட்வீட் செய்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com