மும்பைக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி .
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது நாளான இன்று, மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடிவருகிறது.டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி களம் இறங்கிய கொல்கத்தா வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கவுதம் காம்பீர் 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் ராபின் உத்தப்பா குர்னல் பாண்டியா பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆகி வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதனையடுத்து ஆட வந்த மனிஷ் பாண்டே மும்பை பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலளித்தார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மனிஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடினார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் மனிஷ் பாண்டே அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியில் குர்னல் பாண்டியா 3 விக்கெட்டுகளும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மும்பை அணி 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.