ஐபிஎல் 2020 : மும்பை VS சென்னை : ஜெயிக்கப் போவது யாரு?

ஐபிஎல் 2020 : மும்பை VS சென்னை : ஜெயிக்கப் போவது யாரு?
ஐபிஎல் 2020 : மும்பை VS சென்னை : ஜெயிக்கப் போவது யாரு?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டாலே அது இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போட்டி போல நொடிக்கு நொடி பரபரப்பு தான். 

இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வருவது தான் அதற்கு கரணம்.

இதுவரை மும்பை நான்கு முறையும், சென்னை மூன்று முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. அதில் மும்பை ஐந்து முறையும், சென்னை எட்டு முறையும் ஐபிஎல் பைனலில் விளையாடியுள்ளன. 

இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 28 போட்டிகளில் நேருக்கு நேராக மோதி விளையாடியுள்ளன. அதில் மும்பை பதினேழு முறையும், சென்னை பதினொரு முறையும் வென்றுள்ளன.

பேட்ஸ்மேனாக ரெய்னாவும், பவுலராக மலிங்காவும் தான் அதிக ரன் மற்றும் விக்கெட் வீழ்த்திய வீரர்களாக உள்ளனர். இருவருமே இந்த சீசனில் ஆடாதது சென்னைக்கும், மும்பைக்கும் பின்னடைவு தான். 

இருப்பினும் பியூஷ் சாவ்லாவும், பிராவோவும் ஐபிஎல் தொடரில் டாப் 5 லீடிங் விக்கெட் டேக்கர்களாக இருப்பது சென்னைக்கு உதவலாம். மும்பையும் மலிங்காவுக்கு மாற்றாக போல்ட், மெக்லிங்கனை பயன்படுத்திக் கொள்ளும். 

அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 பேட்ஸ்மேன்களில் சென்னைக்கு தோனியும், வாட்சனும் உள்ளனர். மும்பை சார்பில் ரோஹித் ஷர்மாவும், பொல்லார்டும் உள்ளனர். 

2014 ஐபிஎல் சீசனின் முதல் பாதி தொடர் துபாயில் தான் நடைபெற்றது. அதில் ஐந்து ஆட்டங்களில்  விளையாடிய மும்பை அணி ஐந்திலும் தோல்வியை தழுவியிருந்தது. சென்னை நான்கு போட்டிகளில் வென்றிருந்தது. 

ஸ்லோ பிட்ச்சான துபாயில் டாஸ் வெல்வதும் அவசியமாக கருதப்படுகிறது. இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, ஜடேஜா, சான்ட்னர் மற்றும் தமிழக வீரர் சாய் கிஷோர் என சென்னை அணிக்காக சுழற் பந்து வீச்சில் அசத்த ஒரு பெரிய படையே உள்ளது. 

பேட்டிங்கில் இரு அணியுமே சமபலம்  கொண்ட அணியாக உள்ளன. ரெய்னா இல்லாதது சென்னைக்கு சற்று பின்னடைவு தான். 

இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரண்டு சாம்பியன் அணிகளுக்குமே 50 : 50 சான்ஸ் தான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com