பஞ்சாப் அணி முதல் பேட்டிங் - சிஎஸ்கே வழியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி?

பஞ்சாப் அணி முதல் பேட்டிங் - சிஎஸ்கே வழியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி?
பஞ்சாப் அணி முதல் பேட்டிங் - சிஎஸ்கே வழியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி?

15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன், மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை 22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து புனேவில் உள்ள எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 23-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை அணி மற்றும் 5 முறை கோப்பை வென்ற மும்பை அணி இந்த சீசனில் முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தன. இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி, பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 5 முறை சாம்பியனான மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் தீவிர முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது. ராமன்தீப் திங்கிற்கு பதிலாக டைமல் மில்ஸ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

5-வது போட்டியில் இன்று விளையாடும் மும்பை அணி முதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி என புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 7-வது இடத்தில் உள்ளது. அதனால் தோல்வியிலிருந்து மீளும் நோக்கில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ப்ருவீஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கெய்ரன் பொலார்ட், டைமல் மில்ஸ், முருகன் அஸ்வின், ஜெயதேவ் உனத்கட், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோ, ஒடியன் ஸ்மித், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், காகிசோ ரபாடா, ராகுல் சஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com