விளையாட்டு துறையில் அடுத்த பாய்ச்சல்.. முகேஷ் அம்பானி எந்த அணியை வாங்குகிறார் தெரியுமா?

விளையாட்டு துறையில் அடுத்த பாய்ச்சல்.. முகேஷ் அம்பானி எந்த அணியை வாங்குகிறார் தெரியுமா?

விளையாட்டு துறையில் அடுத்த பாய்ச்சல்.. முகேஷ் அம்பானி எந்த அணியை வாங்குகிறார் தெரியுமா?
Published on

லிவர்பூல் கால்பந்து அணியை கையகப்படுத்துவதற்கான ஏலத்தில் முகேஷ் அம்பானி இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி. தொழில்துறையில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் கால்பதித்து வெற்றி கண்டிருக்கிறது அவரது நிறுவனம். ஐபிஎல் கிரிக்கெட் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனம்,  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளையும் நடத்தி வருகிறது. மேலும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் (AIFF) கமர்ஷியல் பார்ட்னராகவும் அவரது நிறுவனம் உள்ளது.  

இந்நிலையில் விளையாட்டுத் துறையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி உள்ளார் முகேஷ் அம்பானி. உலகப் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான லிவர்பூல் எஃப்.சி.யை கையகப்படுத்துவதற்கான ஏலத்தில் முகேஷ் அம்பானி இறங்கியுள்ளதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. லிவர்பூல் எஃப்.சி.யின் தற்போதைய உரிமையாளராக இருக்கும் ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குழுமத்திடம்  இருந்து 4 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுக்கு வாங்க முகேஷ் அம்பானி முன்வந்துள்ளதாக 'தி மிரர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: உலகக் கோப்பை கால்பந்து: இம்முறையாவது கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து? - ஓர் அலசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com