தென்னாப்பிரிக்காவில் என்ன செய்திருக்க வேண்டும்? தோனி
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி என்ன செய்திருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி கூறினார்.
சென்னை வந்துள்ள எம்.எஸ்.தோனி, செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு பற்றி கேட்கப்பட்டது. அனுபவ வீரராக என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது, ‘தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் நிலைக்கு பதில் சொல்வதாக இதை கருதவேண்டாம். பொதுவாக, டெஸ்ட் போட்டியில் ஒரு அணி வெற்றிபெற வேண்டுமென்றால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அது கடினம் என்று தெரிந்தால் டிராவை நோக்கி செல்லவேண்டும். டிராவை நோக்கி செல்ல என்ன செய்ய வேண்டும் என்றால், ரன்களை குறைவாக விட்டுக்கொடுத்து, ரன்களை அதிகமாக எடுக்க வேண்டும். இந்தியாவில் விளையாடினாலும் சரி, வெளிநாட்டில் விளையாடினாலும் சரி, இதுதான் முறை’ என்றார் தோனி.

