''ஒருவேளை தோனியை நீண்ட ஹேர்ஸ்டைலுடன் பார்த்திருந்தால்..'' - உண்மையை உடைத்த சாக்‌ஷி

''ஒருவேளை தோனியை நீண்ட ஹேர்ஸ்டைலுடன் பார்த்திருந்தால்..'' - உண்மையை உடைத்த சாக்‌ஷி

''ஒருவேளை தோனியை நீண்ட ஹேர்ஸ்டைலுடன் பார்த்திருந்தால்..'' - உண்மையை உடைத்த சாக்‌ஷி
Published on

ஆரஞ்சு வண்ணம் தீட்டிய நீண்ட முடியுடன் தோனியைப் பார்த்திருந்தால் நான் அவரை கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன் என அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்ஸ்டா பக்கத்தில் நேற்று கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி நேரலையில் பேசினார். பல்வேறு தகவல்கள் குறித்து சுவாரஸ்யமாகப் பேசிய அவர் தோனியின் ஆரம்பக்கால ஹேர்ஸ்டைல் குறித்தும் பேசினார். அதில், நீண்ட முடி அதில் ஆரஞ்சு வண்ணம் என இருந்த தோனியின் ஹேர்ஸ்டைல் ஒரு பேரிடர் என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

அது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு நன்றாக இருக்குமென்றும் தோனிக்கு ஒட்ட வெட்டிய ஹேர்ஸ்டைலே அழகாக இருக்குமென்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அதிர்ஷ்டவசமாக நான் தோனியை நீண்ட முடியுடன் பார்க்கவில்லை. அந்த ஆரஞ்சு வண்ணம் தீட்டிய நீண்ட முடியுடன் தோனியை பார்த்திருந்தால் நான் அவரை கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன் தெரிவித்தார். மேலும், ஒட்ட வெட்டிய குறைந்த அளவு முடியுடன் இருக்கும் தோனியை சந்திக்க வைத்த கடவுளுக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் நீண்ட முடியுடனே தோனி காணப்பட்டார். ரசிகர்கள் பலருக்கு பிடித்தமான தோனியின் ஹேர்ஸ்ஸ்டைல் குறித்து அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் முஷாரப்பும் கருத்து தெரிவித்து இருந்தார். தோனி தன்னுடைய நீண்ட முடியை வெட்டக்கூடாது என்றும் அவர் அன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com