கோல் கீப்பரானார் தோனி !

கோல் கீப்பரானார் தோனி !
கோல் கீப்பரானார் தோனி !

உலகளவில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறியப்பட்டவர் மகேந்திர சிங் தோனி. தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கும், துரிதமாக கேட்ச் பிடிக்கும் லாவகமும், அசரடிக்கும் ரன் அவுட்களும் என எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடியவர். தோனியின் பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தோனிக்கு கிரிக்கெட் மட்டுமே தெரிந்த விளையாட்டு அல்ல.

தோனிக்கு கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக பிடித்த விளையாட்டு கால்பந்து. கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என்றால் கால்பந்தில் தல தோனி கோல் கீப்பர். இப்போது இங்கிலாந்தில் இருந்து ஒருநாள் போட்டித் தொடர் முடிந்து நாடு திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வென்றால் கூட சும்மா வீட்டில் இருக்கவி்ல்லை. குடும்பத்துடன் விழாக்களுக்கு செல்வது, நண்பர்களுடன் விளையாடுவது என தனக்கு பிடித்ததை செய்து வருகிறார் அவர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள கால்பந்து மைதானத்தில் அவர் நடிகர் இஷான் கட்டருடன், இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் தம்பி. அண்மையில் இஷான் கட்டர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்த தடக் திரைப்படம் வெளியானது. அவருடன் தோனி கால்பந்து விளையாடிய புகைப்படம் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியானது.

தோனிக்கு இளம் வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். சிறுவயில் அவர் பள்ளியில் கால்பந்தாட்ட அணியில் இருந்தார். அதன் பின்புதான் பள்ளி கிரி்க்கெட் அணியின் விக்கெட் கீப்பரானார். கிரிக்கெட் பயிற்சியிந் போது கூட சக வீரர்களுடன் கால்பந்து பயிற்சி மேற்கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com