\
ஸ்டைலிஷான புது லுக்கில் தோனி: வைரலாகும் புகைப்படங்கள்

ஸ்டைலிஷான புது லுக்கில் தோனி: வைரலாகும் புகைப்படங்கள்

ஸ்டைலிஷான புது லுக்கில் தோனி: வைரலாகும் புகைப்படங்கள்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஸ்டைலில் பல்வேறு கோணங்களில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. தற்போது அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நடிகர் ரன்வீர் பகிர்ந்தார். ரசிகர்கள் பல மாதங்களுக்கு பின்பு தோனியை பார்த்ததால் அந்தப் புகைப்படங்கள் அப்போது வைரலானது.

கொரோனா பாதிப்புக்கு முன்பாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போதுதான் ரசிகர்கள் தோனியை கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2021 இரண்டாவது பாதி ஆட்டங்களில் தோனி விளையாட இருக்கிறார். இதனிடையே தோனியின் புது லுக் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் தோனி செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார். அதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com